கமல் ஓவியம். உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். அவரது ரசிகர் ஒருவர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கமலின் உருவத்தை வித்தியாசமாக வரைந்து அசத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்துள்ள மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் ஓவியத்தில் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து தனது முழங்கால் இடுக்கில் பெயின்ட் பிரஷை வைத்துக் கொண்டு கமல்ஹாசனின் உருவத்தை 20 நிமிடங்களில் வித்தியாசமாக வரைந்து அசத்தியுள்ளார். அவர் வரைந்துள்ள வித்தியாசமான ஓவியத்தை பார்த்து பொதுமக்களும் கமலின் ரசிகர்களும் நெகிழ்ந்துள்ளனர். பலரும் ஓவியர் செல்வத்துக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.