துபாய்: வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவல் 22 மொழிகளில் வெளியாகி உள்ளது. தற்போது, ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
துபாயில் நேற்று அட்லாண்டிஸ் ஹேட்டலில் நடைபெற்ற ரைஸ் மாநாட்டில் (The Saga of the Drylands) கீதா சுப்ரமணியம் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகவுள்ளது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொண்டனர்.
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத் தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
இதையும் படியுங்கள்: இசை மேதை இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர்

கவிப்பேரசு என்ற பெயரால் அழைக்கப்படும் வைரமுத்துவிற்கு முனனாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியால் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களையும் எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் கலைத் திறனை பலரும் வியந்து போற்றியுள்ளனர்.
இவரின் பேச்சும் தமிழ் உச்சரிப்பு கவி பேசும் என்பதில் ஐயமில்லை. மேலும், இவர் கவிதை, நாவல் என 37 நூல்களை எழுதியுள்ளார். இவரின் படைப்புகளை பாராட்டியும் இவரின் கள்ளிக்காட்டு இதிகாசம் மற்றும் கருவாச்சி காவியத்தையும் மக்கள் மிகுந்து போற்றினர்.
இந்த நாவலை சாகித்ய அகாதமி பல மொழிகளில் மொழி பெயர்க்கத் திட்டமிட்டது. முதலாக 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு துபாய் சர்வதேச மாநாட்டில் 32 நாட்டு பிரதிநிதிகளின் மத்தியில் வெளியாகி பெருமை சேர்த்துள்ளது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.