விஜய்சேதுபதி தன் சிறப்பான நடிப்பு திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் மிகையாகாது. தற்போது, டிஎஸ்பி என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பொன்ராம் தன் முதல் படத்திலேயே பெரும் வெற்றி பெற்று வந்தார். தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

தற்போது, நல்ல கதை அம்சம் கொண்ட படத்தை மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு கொடுத்திருக்கின்றார். அதில் அவர் மாஸான போலீஸ் வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். மேலும், பிக்பாஸ் சிவானி, குக்வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: நடிகர் சந்தானம் துப்பறிவாளனாக ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில்
டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. சேதுபதி படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் விஜய்சேதுபதி தற்போது இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக பைக்கில் வரும் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகின்றது.
இப்படம் இந்தாண்டு கடைசியில் டிசம்பர் மாதம் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இந்தி படத்திலும் நடித்து வருகின்றார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜாவான் படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை அணுகுங்கள்.