இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக உச்சிநீதி மன்றத்தின் விசாரணை நேரலையில் இன்று ஓலிபரப்பப்படுகிறது.
உச்சநீதிமன்ற விசாரணைகள் இன்று நேரலையில் பொது மக்கள் காலை 10.30 மணியிலிருந்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதி மன்றத்தின் விசாரணைகள் நேரலையில் இன்று செய்யப்படுகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று முக்கிய விசாரணைகளாக இலஙசங்கள், பில்கிஸ் பானோ, கோரக்பூர் கலவரம் ஆகிய முக்கிய வழக்குகலுக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. கடந்த வருடம் 2021 ஏப்ரல் 24 ம் தேதி உச்சநீதி மன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொண்டார் இவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி யு.யு.லலித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பொறுப்பேற்க உள்ளார். மிகக்குறுகியகாலமாக, 2022, நவம்பர் 8ம்தேதி வரை யு.யு.லலித் பதவி வகிப்பார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தில் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி என்.வி.ரமணா பிறந்தார். தொடக்கத்தில் 3 ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றி பின்னர் நீதித்துறையில் கால் பதித்தார் என்.வி.ரமணா.1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக பணியை தொடங்கி 2000-ம் ஆண்டில் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதியானார்.
2013-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். இந்நிலையில், இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி உச்சநீதி மன்ற விசாரணை நேரலையில் ஓலிபரப்பலாகிறது.