APPLE I PHONE 13: பிளிப்கார்ட் பிக்பில்லியன் சேலில் இந்த போன் 35000 வரை விலை குறைகிறது. சமீப காலங்களில் ஆன்லைன் விற்பனையில் பல போட்டிகள் நிலவி வருவதால் பல ஆன்லைன் நிறுவனங்கள் பல தள்ளுபடி விற்பனைகளை அறிவித்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
அதிலும் ஸ்மாட் போன்களின் விலைகளில் பெரும் தள்ளுபடிகளை செய்து வருகின்றன. ஆப்பில் ஐ போன் 13 பற்றிய பல தள்ளுபடி தகவல்களை ஆன்லைன் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகை என்ற பெயரில் பல விலை தள்ளுபடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் விற்பனை தளங்களில் மிகவும் பிரதானமாக இருப்பது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகும். இரண்டு தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகை தினங்களை அவ்வப்போது அறிவிப்பது வழக்கம்.
இந்த நிலையில், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் ஒரே தினங்களில் சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. இந்த தினங்களில் பல்வேறு கேட்ஜெட்களும் அதீத சலுகையுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது பிளிப்கார்ட் பிக் மில்லின் தின விற்பனையானது செப்டம்பர் 23 ஆம் தேதி நேரலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில் அமேசானும் சலுகை தின விற்பனை அறிவிக்க இருக்கிறதுஎன தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 13 கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மற்றும் மினியுடன் ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்க. ஆப்பிள் ஐபோன் 13 இன் 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு வகைகளின் விலை முறையே ரூ.79,900 மற்றும் ரூ.99,900.
இது தவிர, Flipkart உங்களின் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.17,000 தள்ளுபடியையும் வழங்குகிறது. Flipkart Big Billion Days 2022 விற்பனையின் போது கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் இணைத்தால், Apple iPhone 13ஐ ரூ.35,000க்குள் பெறலாம். பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது கட்டணமில்லா EMI மற்றும் திரை சேத பாதுகாப்பும் கிடைக்கும்.