இந்தியாவிலேயே முதன் முறையாக உடலை அறுக்காமல் போஸ்ட்மார்ட்டம்

0
6

இந்தியாவிலேயே முதன் முறையாக உடலை அறுக்காமல் போஸ்ட்மார்ட்டம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இறந்தவரின் உடலை அறுக்காமல் மெய்நிகர் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மெய் நிகர் ஆய்வகத்தில் நவீன ஸ்கேன் மூலம் உடலில் எல்லா பாகங்களையும் மருத்துவர்களால் தெளிவாக பார்க்க முடியும். நேற்று இறந்த நடிகர் ஸ்ரீவத்ஸாவின் உடல்தான் முதன்முதலில் மெய்நிகர் வடிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று பாலிவுட் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஸ்ரீவத்ஸவா மாரடைப்பால் காலமானார். பாலிவுட்டில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்ற இவர், மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக உடலை அறுக்காமல் போஸ்ட்மார்ட்டம்

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் ராஜூ ஶ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், உற்கூராய்விற்க்காக மருத்துவமனைக்கு வந்த அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் மெய்நிகர் ஸ்கேன் மூலம் அவரது உடலை அறுக்காமல் உடற்கூராய்வு செய்ய அனுமதி கேட்டனர். அவர்களும் அதற்கு ஓப்பு கொண்டனர். அதன் காரணமாக இந்தியாவிலேயே முதன் முறையாக உடலை அறுக்காமல் போஸ்ட்மாட்டம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here