உலக சாம்பின் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. கிரப்டோ கோப்பை செஸ் போட்டியின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை வென்று சாதனை படைத்தார் பிரக்ஞானந்தா.
கிரிப்டோ கோப்பை தொடரின் ஏழாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. அதாவது பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் 4 ரேபிட் கேம்களில் கார்ல்சனை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றிருந்தால் கார்ல்சனை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருப்பார். ஆனால் ஆட்டம் டை பிரேக்கிற்குச் சென்றதால் கார்ல்சன் சாம்பியன் ஆனார். டைப்பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று 2ம் இடம் பிடித்தார்.
கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். பிரதான போட்டியில் 2-2 என்ற நிலையில் டைம்பிரேக்கரில் கார்ல்சனை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இதுவரை நடந்த நடப்பாண்டு போட்டிகளில் உலக சாம்பின் கார்ல்சனை வெல்வது மூன்றாவது முறையாகும்.

சாம்பியன்ஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் 17 வயது வீரரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா போலந்து வீரர் கிரைஸ்டாஃப் டுடாவிடம் தோல்வி அடைந்தார், இது தொடர்ச்சியான 2வது தோல்வியாகும்.
சமீபத்தில் நடைப்பெற்ற சென்னை செஸ் ஓலிம்பியாட் போட்டிகளில் பிரக்ஞானந்தா தோல்விகளை பெற்ற போதிலும் பல போட்டிகளில் வெற்றியும் பெற்று பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.