காட் ஃபாதர் மற்றும் கோஸ்ட் படங்கள் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது

0
2

காட் ஃபாதர் மற்றும் கோஸ்ட் படங்கள் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

தெலுங்கு முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜூன் இருவரின் படங்களும் விஜயதசமி நாளான இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த இரு படங்களின் டீசர் மற்றும் டிரைலர்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட் ஃபாதர் திரைப்படம், மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் ரீமேக்காகும். மலையாளத்தில் மோகன் லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் சல்மான் கான், நயன்தாரா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த படத்திற்கு நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். இசையில் தமண் தெரிக்க விட்டிருக்கின்றார். நடிகர் சிரஞ்சீவிக்கு இதற்கு முன் வெளியான படங்களான ஆச்சார்யா, சைரா திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் ஓரு நல்ல படத்தை வழங்க வேண்டும் என்ற சூழலில் சீரஞ்சீவி இப்படத்தில் நடித்துள்ளார்.

காட் ஃபாதர் மற்றும் கோஸ்ட் படங்கள் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது

கோஸ்ட் படத்தில் ஹீரோவாக நாகார்ஜுனா நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் நார்த் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இதில் நாகார்ஜுனாவுடன் குல்பனாக், சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சென்டிமென்ட் கலந்த முழு நீள ஆக்சன் படமாக கோஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரவீன் சாத்தரு இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசை மார்க் ராபின். ஒளிப்பதிவு தர்மேந்திர ககரளா. காட்ஃபாதர், கோஸ்ட் என 2 படங்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here