மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும் தமிழ்நாடு அரசு

0
14

உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியீடு.

ஐஐடி, (indian institute of technology) இந்திய அறிவியல் கழகம், (Indian Institute of Science) எய்ம்ஸ் (AIMS) போன்ற கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த பட்ஜெட் அறிவித்த வாக்குறுதியை அறிவுறுத்தி அரசணை வெளியீடு.

ஓரு நாட்டின் வளர்ச்சி குழந்தைகளின் கல்வியில் தான் உள்ளது. நாட்டின் அனைத்து மக்களாலும் அவர்கள் பெற்ற குழந்தைகளின் கல்வியை தர முடிவதில்லை. காரணம் பல இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் வறுமை. கூலி வேலை செய்யும் தொழிலாளியின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடருவதே பெரும் பாடாக உள்ள இந்நிலையில், உயர்கல்வி என்பது அவர்களுக்கு எட்டாக் கனியாக உள்ளது.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாக இருப்பார்கள் அவர்கள் பள்ளி படிப்பை தொடர்ந்து பெறுவதற்கு அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அரசு செய்து வருகிறது.

மாணவர்களின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும் தமிழ்நாடு அரசு

பள்ளி பாடப் புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, மேல் நிலை படிப்பை முடித்ததும் உயர்கல்வியை தொடங்கும் போது மடிகணிணி என பல விலையில்லா இலவச திட்டங்களை அரசு செய்து வருகிறது.

தற்போது, ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்ற திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டு உள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here