FREE FIRE GAME: மதுரை உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி

0
28

FREE FIRE GAME: தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகளை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் சைபர் க்ரைம் என்ன செய்கிறது என மதுரை உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி.

இளைஞர்கள் மத்தியில் ப்ரி பையர் என்ற ஆன்லைன் விளையாட்டு அதிகரித்து வந்தது இதனால் பல பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகினர். இதன் காரணமாக இவ்விளையாட்டை முடக்க உயர்நீதி மன்றம் கூறியது. ஆனால் இன்று வரை அதை இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் விளையாடி வருகின்றனர். முற்றிலும் தடை செய்யப்பட்ட பின்னரும் எப்படி அந்த விளையாட்டு ஆன்லைனில் வருகிறது. இது சம்பந்தமான விசாரிக்கும் சைபர் கைரைம் என்ன செய்கிறது என்றும் மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இந்நிலையில, நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஐயரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை.

இது தொடர்பாக விசாரித்த போது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் என தெரிவித்தனர்.

FREE FIRE GAME: மதுரை உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி

வளரிலும் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பிரீ பையர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறையினர் அதனை விளையாடுவது எப்படி? காவல்துறையினரும், சைபர் கிரைமினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினர்.

அதனை தொடர்ந்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டு, இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here