நவராத்திரியின் ஐந்தாம் நாளின் சிறப்புகள்: இந்தியா முழுவதிலும் இந்து மக்கள் பண்டிகைகளில் நவராத்திரியும் ஓன்று இந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஓன்பது நாட்களும் ஓவ்வொரு நாளும் அம்பிகை வழிபாடு செய்வர். அச்சமயம் விதவிதமான அலங்காரங்கள் மற்றும் பிரசாதங்கள் பக்தி பாடல்கள் என அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெறும்.
இன்று நவராத்திரி விழாவின் 5ம் நாளாகும். இன்று எந்த தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும் மற்றும் வழிமுறைகளை இப்பதிவில் அறியலாம்.
நவராத்திரியானது புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லஷ்மி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் என பூஜைகள் நடத்தப் பெறும்.
இதையும் கவனியுங்கள்: நவராத்திரி நான்காம் நாளில் வழிபடும் தெய்வம் மற்றும் சிறப்பு

நவராத்திரி நாள் 5: செப்டம்பர் 30, வெள்ளி கிழமை
வழிபட வேண்டிய சக்தி தேவி: வைஷ்ணவி தேவி (மோகினி), மகேஸ்வரி, ஸ்கந்த மாதா
திதி: பஞ்சமி
நிறம்: பச்சை
மலர்: மனோ ரஞ்சிதம், பாரிஜாதம், திருநீற்றுப் பச்சிலை
கோலம்: கடலை மாவினால் பறவை கோலம் போடா வேண்டும்
ராகம்: பந்துவராளி ராகம்
நைவேத்தியம்: காலை நேரத்தில் தயிர் சாதம் மற்றும் மாலை நேரத்தில் கடலை பருப்பு சுண்டல்
மந்திரம்: கனக தாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம்
பலன்கள்: புத்திர பாக்கியம் கிடைக்கும், வீட்டில் சுபிட்சம் உண்டாகும், விரயங்கள் குறையும், பெண் தெய்வங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும், சாப நிவர்த்தி பெறலாம்.
இந்த நவராத்திரியில், ஐந்தாம் நாள் வெள்ளி கிழமை அன்று வருவது மிகச்சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் சிறுமிகளை அழைத்து, உணவளித்து, ஆடை, எழுதுகோல், புத்தகம், வளையல், கண்ணாடி, மருதாணி என்று பொருட்களை அவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்குடன் வழங்கி, ஆசி பெறலாம்.
அம்பாளுக்கு சமைத்து நைவேத்தியம் செய்த உணவை அவர்களுக்கு முதலில் வழங்கி நீங்கள் சாப்பிடலாம். அதே போல, சுமங்கலிப் பெண்களையும் வீட்டுக்கு வரவேற்று, தாம்பூலம் கொடுத்து அவர்களின் ஆசி பெற இன்று உகந்த நாள்.
இது போன்ற எண்ணற்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.