ஜோதிடத்தில் ஓவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஓரை நேரங்கள் வகுக்கப்பட்டிருக்கும். அவ்வோரை நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது, என்ன என்ன செய்தால் நன்மை உண்டாகும் என்பதை இப்பதிவின் மூலம் அறியலாம்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்றால் ஆதிக்கம் என்று பொருள். அதாவது ஒரு நாளின் ஓவ்வொரு கிரகத்திற்கும் ஓவ்வொரு நேரங்களில் ஓரைகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது. அதோடு எந்த கிழமையில் எந்த கிரகம் ஆதிக்கம் பெற்று விளங்கும். எந்த ஓரையில் சுப நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும் என அனைத்தும் ஓரையின்படி தான் நடைபெறும். ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சமாக இருப்பது கிரகங்கள். பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அவ்வோரைகளை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எந்த ஓரு நல்ல காரியமாக இருந்தாலும் ஓரை பார்த்து செய்ய வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்போம். ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு மணி நேரமும் ஓரையானது மாறி கொண்டே இருக்கும்.
Today Hora Timings – ஓரையானது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு மற்றும் செவ்வாய் என்ற அடிப்படையில் வரிசையாக வரும். ஒரு ஓரையில் அளவு 1 மணி நேரமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிழமையின் தொடக்கத்திலும் அந்த கிழமையின் அதிபதி கிரகத்தின் ஓரையாகவே இருக்கும்.
திங்கள் கிழமைகளில் முதல் ஓரை சூரிய உதயம் தொடக்கி 6-7 மணி வரை சந்திர ஓரை ஆகும். பிறகு சனி, குரு, செவ்வாய் ஓரை என ஒரு மணி நேரத்திற்கும் மற்ற ஓரைகள் பின்தொடர்ந்து வரும். கீழ் வரும் ஓரை அட்டவணையில் தெளிவாக காண்போம்.

நவகிரகங்களில் ராகுவும், கேதுவும் சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லை என்பதாலும் அவ்விரு கிரகங்களுக்கும் ஓரை கிடையாது. சூரியனை மையப்படுத்தி, அதற்க்கு அருகிலும் தொலைவிலும் உள்ள கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி மற்றும் அதன் அலைக்கதிர்கள் நாம் வாழும் இந்த பூமியை அடைவதற்கான நேரம் இப்படி பல விடையங்களை அடிப்படியாக கொண்டே ஓரை நேரத்தை நம் முன்னோர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு ஓரை பற்றியும், அதில் நாம் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றியும் இனி காண்போம்.
இதையும் படியுங்கள்: ஜாதக பொருத்தம் பார்த்தல் தமிழில்
இதையும் படியுங்கள்: மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்
சூரிய ஓரை:
- பொதுவாக சூரிய ஓரையில் அரசு சார்ந்த பணிகளில் ஈடுபடலாம்.
- நண்பரிடம் ஆலோசனை கேட்டல் அல்லது உதவி கேட்டல் சூரிய ஓரையில் கேட்கலாம்.
- சொத்து சம்பந்தமான உயில் எழுதுதல், வாகனம் பதிவு செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
- சூரிய ஓரையில் மிக முக்கியமாக வீடு குடி போதல் கூடாது.
- சிலருக்கு இந்த நேரத்தில் பொருள்கள் தொலையவும் வாய்ப்புகள் இருக்கும். சூரிய ஓரையில் தொலையும் பொருள்கள் திரும்ப கிடைப்பது அரிது.
- அவ்வாறு கிடைக்குமானால் அது கிழக்கு பகுதியில் தான் கிடைக்கும்.
- சுப காரியங்கள் செய்ய இவ்வோரை நேரம் நல்லதாக இல்லை.
சுக்ர ஓரை:
- அனைத்து விதமான நல்ல விஷயங்களை மேற்கொள்ள ஏற்றதாக இருக்கிறது.
- பெண் பார்த்தல், திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடல் என பெண்கள் தொடர்பான அனைத்து விஷயங்கள் வெற்றியை தரும்.
- வீடு வாங்குதல், மனை வாங்குதல், புதிய வாகனங்கள் வாங்குதல் என விலை உயர்நத பொருகள்கள் எதுவாயினும் சுக்ர ஓரையில் வாங்கலாம்.
- நெடுந்தூர பயணம் மேற்கொள்ள ஏற்ற காலமாக பார்க்கப்படுகிறது.
- பெண்களுக்கு வளைகாப்பு போன்ற சுப நிகழ்வினையும் சுக்ர ஓரையில் நடத்தலாம்.
- இவ்வோரை நேரத்தில் தொலைந்து போன பொருள் மேற்கு திசையில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
- சுக்ர ஓரை நேரத்தில் கடன் கொடுக்க கூடாது. கொடுத்த கடனை வசூலிக்கலாம்.
- இந்நேரத்தில் மருந்துகள் உட்கொள்ளலாம்.
Contents
சந்திர ஓரை:
- சுப காரியங்கள் செய்ய ஏற்றதாக உள்ளது.
- தொழில் காரணமாகவோ அல்லது வழிபாட்டுக் காரணங்களுக்காவோ பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் இவ்வோரை நேரத்தில் பயணிக்கலாம்.
- திருமணம் தொடர்பான பேச்சுகள், குழந்தைகளுக்கு காது குத்துதல் மற்றும் மொட்டை அடித்தல், பெண் பார்த்தல் என அனைத்தையும் செய்ய உகந்ததாக உள்ளது.
- வேலை சம்பந்தமாக நிறுவனத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் வங்கி கணக்கு துவங்குதலை சந்திர ஓரையில் செய்யலாம்.
- இவ்வோரை நேரத்தில் பொருட்கள் எதாவது தொலைந்தால் அது கிடைக்காது.
செவ்வாய் ஓரை:
- செவ்வாய் ஓரையில் எந்த ஓரு புதிய செயலையும் செய்யாமல் இருத்தல் நல்லது.
- கோயிலுக்கு சென்று தெய்வத்தை வணங்குவதற்கு ஏற்ற நாளாக உள்ளது.
- செவ்வாய் ஓரையில் வீடு வாங்குவது விற்பது நல்ல பலனை தரும்.
- சகோதரர்களின் பிரச்சனைகள் இவ்வோரையில் பேசினால் தீரும்.
புதன் ஓரை:
- புதன் ஓரை கல்வி ஸ்தானத்திற்கு உகந்த நேரமாக கருதப்படுவதால் கல்வி சம்பந்தமான அனைத்தையும் விவாதிக்கலாம் புதன் ஓரைகளில் தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம்.
- சுப நிகழ்ச்சிகள் செய்ய ஏற்றது. தாய் வழி உறவினர்களிடையே கலந்து ஆலோசித்தல் நல்ல பலனை தரும்.
- கல்வி பயில்வதற்காக வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுவது சிறப்பாக அமையும்.
- நேர்மையான விஷயங்களுக்கு ஏற்ற நாளாகவும், வழக்கரிஞர்களின் ஆலோசனைகளை பெறவும் உகந்தது புதன் ஓரை.
- இந்த ஓரையில் தொலைத்த பொருட்களை விரைவில் கண்டுபிடித்து விடலாம்.
குரு ஓரை:
- அனைத்து சுபகாரியங்களுக்கு உகந்தது குரு ஓரை. மாங்கல்யம் தொடர்பான தங்கம், வெள்ளி, வைரம் என அனைத்தையும் வாங்க ஏற்றது.
- சாந்தி முகூர்த்தத்திற்கு மிகவும் ஏற்ற நேரமாக உள்ளது.
- புதிய வியாபாரம், விவசாயம் என புதிய தொழில் தொடங்க ஏற்ற நேரம் குரு ஓரை.
- புதிய ஆடைகள், புதிய கடைகள் திறக்க, கல்வி பயில மற்றும் கல்வியை கற்று கொடுக்க ஏற்றது.
- வீடு மற்றும் வீட்டு மனைகள் வாங்கவும் விற்கவும் உகந்த ஓரையாக இருக்கிறது.
- கடல் கடந்து செல்லும் கப்பல் பயணங்களை மேற்கொள்ள ஏற்றது, தான தர்மம் செய்தல் நல்ல பலனை கொடுக்கும்.
- எத்தொழில் செய்தாலும் நேர்மையான தொழிலாக இருக்க வேண்டும் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
- இந்நேரத்தில் தொலைத்த பொருட்கள் உடனே திரும்ப கிடைத்துவிடும்.
சனி ஓரை:
- சனி ஓரையில் வாங்கிய கடனை அளிப்பதற்கு ஏற்ற நேரமாக பார்க்கப்படுகிறது. மேலும், கடன் வாங்காமல் இருக்கும் சூழல் உருவாகும் நிலை ஏற்படும்.
- மேலும், கடனை திரும்ப கொடுத்தலாள் விரைவில் கடன் சுமை குறையும். அதை போல புதிய கடனையும் வாங்க கூடாது. இவ்வேலைகளில் கடன் வாங்கினால் தொடரும் என்பது நம்பிக்கை.
- எந்த ஓரு நல்ல காரியங்களையும் சனி ஓரையில் தொடங்குதல் கூடாது. மருத்துவமனை செல்லுதல் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது.
- பாத யாத்திரை மேற்கொள்வது மரம் நடுதலுக்கு உகந்த நேரமாக சனி ஓரை உள்ளது.
- இந்த ஓரையில் தொலைக்கும் பொருட்கள் பல வருடங்கள் கழித்தே கிடைக்கும்.
அடிப்படை ஜோதிடம்:
நவகிரகங்களில் ஒன்றுக்கொன்று நண்பர்களாகவும், பகைவராகும் உண்டு. இதனை மனதில் வைத்து ஜோதிடர்கள் உங்களுக்கான ஓரைகளை தேர்ந்தெடுத்துச் சொல்வார்கள்.
எந்த நாளில் எந்த ஓரை சுபம்:
ஞாயிறு கிழமைகளில் சனி, சுக்கிர ஓரைகள் பலன் தராது.
திங்கள் கிழமைகளில் சனி ஓரை பலன் தராது.
செவ்வாய்க் கிழமைகளில் சனி, புதன் ஓரை பலன் தராது.
புதன் கிழமைகளில் குரு, சந்திர ஓரை பலன் தராது.
வியாழக் கிழமைகளில் சுக்கிரன், புதன் ஓரை பலன் தராது.
வெள்ளிக் கிழமைகளில் குரு, சூரிய ஓரை பலன் தராது.
சனிக்கிழமைகளில் சூரியன், சந்திரன் சனி ஓரை பலன் தராது.
இப்படி எந்த கிழமைகளில் எந்த ஓரை சிறந்தது அல்லது சிறந்தது அல்ல என தேர்வு செய்து செயல்பட்டால் வாழ்வில் எல்லாம் வெற்றி. மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு மகத்தானது. நம்மை அறியாமலே ஓரைகளுக்குரிய கதிர்வீச்சை நாம் உணர முடியும். அதை உணர்ந்து நடந்து கொண்டால் அனைத்தும் நலம் பெறும்.
மேலும், இது போன்ற ஜோதிடங்கள் பற்றியும் அன்றாட செய்திகள் மற்றும் ஆன்மீக தகவல்களை பெற தலதமிழ் இணைய தளத்தை பாருங்கள், பயன் பெறுங்கள்.