IND VS AUS T20 2022: இன்று தொடங்கும் போட்டி குறித்து சிறப்பு தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்குமுன் நடந்த ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்து பலரது பேச்சுகளுக்கும் ஆளானது. இந்நிலையில், அடுத்த உலக கோப்பை 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரிலியோவில் நடைபெற இருக்கிறது.
அதற்கான முன்னெடுப்பாக இந்தியா ஆஸ்த்திரிலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகிறது. அதற்கான முதல் 20 ஓவர் போட்டிகள் ஆஸ்த்ரேலியா அணியுடன் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் போட்டி மொகாலியிலும், இரண்டாவது போட்டி 23ம் தேதி நாக்பூரிலும், மூன்றாவது போட்டி 25ம் தேதி ஹைத்ராபாத்திலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கொரோனா தொற்று காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்படுகிறார்.

போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என விருப்பப்பட்ட மொழிகளிலும் கமெண்ட்ரி செய்யப்பட உள்ளது. ஹாட் ஸ்டார் ஆஃப் மூலம் போட்டி ஆன் லைனிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
கட்டணமில்லா பார்க்க அரசு துறையின் டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இப்போட்டிகளை நேரலை செய்ய உள்ளது.
இந்தி அணி வீரர்கள்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், அக்சர் படேல், அஸ்வின், சஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: சீன் அபோட், ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் பின்ச் (கேட்ச்), கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜாம்பா.