IND VS NZ 3 ODI: இந்தியா நியூசிலாந்து மண்ணில் 3 20 ஓவர் போட்டிகளையும் 3 50 ஓவர் போட்டிகளையும் கலந்து கொள்ள பயணம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் டி20 போட்டியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இதனை தொடர்ந்து ஓரு நாள் தொடர் தொடங்கப்பட்டது. முதல் ஓருநாள் போட்டியில் 306 ரன்களை குவித்து போதும் அதை நியூசி வீரர்கள் எளிதாக அடித்து வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து இரண்டாவது போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது. 3 வது போட்டி இன்று காலை இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் நியூசிலாந்து அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மைதானத்திற்கு சென்றது. இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை தொடர்வார்கள் என்ற நம்பியிருந்த ரசிகர்களுக்கு பேரிடியாய் முறையே 28, 13 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் நம்பிக்கை தந்தாலும் அதற்கடுத்தப்படியாக வரும் வீரர்கள் தங்களை நிலை நிறுத்தாமல் பேட்டிங் வந்த சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களை கலக்கம் அடைய செய்தனர். தொடர்ந்து நிதானமாக ஆடிவந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரிஷப் மற்றும் சூர்யகுமார் தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தனர். தீபக் ஹாடாவும் ஏமாற்றினார். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் அவர் அரைசதம் கடந்து 51 ரன்களை கடந்து இறுதி கட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இதையும் படியுங்கள்: விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை படைத்துள்ளார்
தொடர்ந்து வந்த அனைவரும் நிதானத்தை இழந்து பேட்டிங்கில் சொதப்பி இந்திய அணி எளிய இலக்கை தீர்மானித்துள்ளது. இறுதி வரை போராடிய வாசிங்டன் சுந்தர் 5 போர்கள் 1 சிக்சர் என 51 ரன்களை அடித்து நியூசிக்கு 220 ரன்களை இலக்காக தீர்மானித்தார். இந்திய அணியின் பெயரை காப்பாற்ற ஸ்ரேயாஸ் மற்றும் சுந்தர் மட்டுமே சீரான ரன்களை எடுத்து உதவினர்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.