IND VS SA 3 ODI: இந்தியா அபார வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணியுடன் மூன்று ஓருநாள் தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி முதலாவது போட்டியில் இந்தியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது போட்டியில் 278 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்ரிக்கா வீரர்களின் பவுலிங்கை பதம் பார்த்தனர் நம் இந்திய அதரடி வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் யாதவ் 93 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் அவுட்டாகாமல் 113 ரன்களும் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். இதனால் இரண்டாவது ஓருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பெற்று சமனிலையை ஏற்படுத்தியது.
மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும் என்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட நேற்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா முதலாவதாக பேட்டிங் செய்ய திட்டமிட்டு களமிறங்கியது. ஆனால், தொடக்கம் முதலே இந்திய பவுலிங்கை எதிர் கொள்ள முடியாமல் தென் ஆப்ரிக்கா வீரர்கள் தடுமாறினர்.

தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த நிலையில், குலேசன் மட்டும் 30 ரன்களை கடந்து வந்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்தார். பின்னர், 25 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா அனைத்து விக்கெட்களை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக சூழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தவான் 8 ரன்களிலும், இஷான் கிஷன் 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஷ்ரேயஸ் ஐயர், 23 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார்.
நிலைத்து நின்று விளையாடிய கில் 57 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சஞ்சு சாம்சன், 2 ரன்கள் எடுத்தார். முடிவில் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.