உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளியது இந்தியா. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 5 வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி காலாண்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 1947ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டுச் செல்லும்போது நம்நாட்டின் மக்கள் தொகை 34 கோடி. பொருளாதாரம் மிகவும் நலிந்தநிலையில், கல்வியறிவு வெறும் 12 சதவீதம் மட்டுமே இருந்தது.
இந்தியாவின் ஜிடிபி 2.70 லட்சம் கோடியாக இருந்தது உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்கு வெறும் 3 சதவீதம் மட்டும்தான் அப்போது இருந்தது. தற்போது ரூ.135 லட்சம் கோடி ஜிடியாக மாறிவிட்டது.
சுதந்திரம் பெறும்போது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.1029 கோடி. ஆனால், தற்போது உலகளவில் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகம் வைத்திருக்கும் 5-வது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது.
ரயில்வே துறையில் 68 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை ஏறக்குறைய எட்டியுள்ளது. கல்வியறிவு 78 சதவீதத்தை எட்டியுள்ளோம். இந்தியாவின் ஜிடிபி 8.7 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இதுவே சாட்சி.
இந்தியா புதிய முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும், அடுத்த இரண்டு நிதியாண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிக வேகமாக இருக்கும் என்று பல உலக நிறுவனங்கள் கணித்திருப்பதாகவும் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
உலக நாடுகள் பணவீக்கத்தால் மிக மோசமான நிலையை அடைந்திருக்கும் நிலையில் இந்தியா அதன் பாதிப்புகளைப் பெரிய அளவில் எதிர்கொண்டு சமாளித்து வருகிறது. இந்நிலையில், உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5 வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.