காயம் காரணமாக முகமது ஷமி வங்கதேச தொடரிலிருந்து விலகல் இதனால் அனுபவ பவுலர் இன்றி இந்தியா களம் காணுவதை ரசிகர்கள் வருத்தமாக கருதுகின்றனர். இந்திய பவுலிங்கில் சிறப்பான வீரர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் பார்க்கப்படும் பூம்ரா மற்றும் ஷமி இருவரும் காயத்தால் விலகியது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் திரும்பி ஏமாற்றத்தை அளித்தது. அதற்கடுத்தது நியூசிலாந்து மண்ணில் பங்கு பெற்று திரும்பியுள்ளது. தற்போது இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டிகளையும் 3 ஓருநாள் தொடரையும் எதிர்கொள்கிறது.

இதில் அனுபவ பவுலர்களான பூம்ரா ஏற்கனவே காயத்தால் பல போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். முகமது ஷமியும் காயம் காரணமாக பல போட்டிகளிலிருந்து வெளியேறியிருந்தார். தற்போது வங்கதேசத்துடனான போட்டிகளில் முகமது ஷமி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வங்கதேச போட்டிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டதில் ஷமிக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முகமது ஷமி வங்கதேசத்துடனான போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் இடம் பெறுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வங்கதேசத்துடனான தொடருக்கு ரோஹூத் சர்மா தலைமையில் இந்திய அணி வங்கதேசம் சென்றுள்ளது. முதல் ஓருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.