ஸ்ரேயாஸ் மற்றும் இஷானின் அதிரடியால் இந்தியா 2ODI ல் வெற்றி பெற்றது

0
1

ஸ்ரேயாஸ் மற்றும் இஷானின் அதிரடியால் இந்தியா 2ODI ல் தென் ஆப்பிரிக்காவை வென்று 1-1 என்ற சமன் செய்தது.

மூன்று ஓருநாள் தொடரில் பங்கு பெறுவதற்காக வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியினருடன் நடந்த முதலாவது போட்டியில் இந்தியாவை வென்றது. அதனை அடுத்து நேற்று ராஞ்சியில் நடந்த இரண்டாவது ஓருநாள் போட்டியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனின் பார்ட்னர்ஷிப்பில் அதிரடியாக விளையாடி இந்தியா அணியை வெற்றி பெற செய்தனர்.

முதலாவதாக டாசை வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதலாவதாக இறங்கிய வீரர்கள் தொடக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அதன் பின்னர் வந்த ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஹென்ரிக்ஸ் 74 ரன்களும், மார்க்ரம் 79 ரன்களும் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினர்.

ஸ்ரேயாஸ் மற்றும் இஷானின் அதிரடியால் இந்தியா 2ODI ல் வெற்றி பெற்றது

அடுத்தது இறங்கிய வீரர்கள் சிறிய ரன்களையே எடுத்த வந்த நிலையில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புடன் தென் ஆப்ரிக்கா 278 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சீராஜ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி முனைப்புடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர் மற்றும் இந்திய கேப்டன் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் முறையே 13, 28 என்ற ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய இஷான் மற்றும் ஸ்ரேயாசும் நிதானமாக ஆடிவந்தனர். பின்னர், இருவரும் அதிரடி காட்டினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 93 ரன்களில் ஆட்டமிழந்து தன் சதத்தை அடிக்க முடியாமல் வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 113 ரன்களை குவித்தார். இவர் ஓருநாள் தொடரில் அடித்த முதல் சதத்தை பதிவு செய்தார்.

இவருடன் இணைந்த சஞ்சு சாம்சன் 23 ரன்களுக்கு மேல் அடித்து வலுசேர்த்தார். இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து, இந்திய அணி இலக்கை எட்டியது. இதையடுத்து, தொடரை கைப்பற்றுவது யார் என முடிவு செய்யும், கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here