உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் தமிழக வீரர் பரத் ஸ்ரீதர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்ற இந்திய அணி சார்பில் பரத் ஸ்ரீதர், ப்ரியா ஹபதனஹல்லி மோகன், கபில், ருபால் ஆகிய 4 வீரர்கள், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி 4*400மீ ஃபைனலில் ஆடியது.
ஃபைனலில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அமெரிக்காவிற்கு எதிராக தன் திறமையை காட்டிய இந்தியா நூழிலையில் இந்தியாவை வீழ்த்தி அமெரிக்கா தங்கம் வென்றது.
அமெரிக்க அணி 3:17:69 என்ற நேரத்திலும், இந்திய அணி 3:17:76 என்ற நேரத்திலும் ஓடி முடித்தன. எனவே அமெரிக்கா தங்கம் வென்றது. இந்திய அணி வெள்ளி வென்றது. இந்திய ஜூனியர் வீரர்கள், வீராங்கனைகள் ஆசிய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளனர். இதுதான் ஆசிய அணியின் அதிவேக 4*400மீ தொடர் ஓட்ட ரெக்கார்டு ஆகும்.

இந்நிலையில், வெற்றி பெற்ற வெள்ளி பதக்கத்துடன் பரத் ஸ்ரீதர் தமிழக முதல்வரிடம் கொடுத்து ஆசிவாங்கினார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெரும் பேறு பெற்று தந்துள்ளார்.