இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிப்பு மேலும் 150க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதியில் உள்ள சியான்ஜுர் என்ற நகரில் இந்திய நேரப்படி, நேற்று காலை 11.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியிருந்தது. மக்கள் அடர்த்திமிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களான பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், வீடுகள் என பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் பலரை மீட்கும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றது. இதில் 700 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமாக இருந்து வருகின்றனர். இந்தநிலையில், ஜாவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல குழந்தைகள் பலியாகி உள்ளனர், இதுவரை சுமார் 1000 பேர் காயமடைந்த நிலையில் 151 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.