IPL Auction: ஏலத்தில் வீரர்களின் அடிப்படை தொகை குறித்த தகவல் வெளியீடு. வருகிற 23ம் தேதி ஏலம் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இதில் உள்ள அணிகளின் நிலைக் கருதி மினி ஏலமானது கேரளாவில் கொச்சியில் வருகிற 23ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த நிலையில் வீரர்கள் பற்றிய விபரமும் அவர்களின் ஏலத் தொகைகான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மினி ஏலத்தில் மொத்தம் 991 வீரர்கள் பங்கெடுக்க உள்ளனர். அதில், 714 இந்திய வீரர்களும், 277 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். தொடர்ந்து, வீரர்கள் ஏலத்தில் தங்களின் அடிப்படை தொகையையும் நிர்ணயித்து உள்ளனர். இதில், 2 கோடி ரூபாய் தொடங்கி பல்வேறு தொகைகளின்கீழ் வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

டாம் பான்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், நாதன் கவுல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், கேன் வில்லியசன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரிலீ ரோசோவ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஏஞ்சலோ மேத்யூஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன். இவர்கள் 2 கோடியை அடிப்படை ஏலத் தொகையாக கொண்ட வீரர்கள்.
சீன் அபோட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மாலன், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட். இவர்கள் 1.5 கோடியை அடிப்படை ஏலத் தொகையாக கொண்ட வீரர்கள்.
மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வுட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், டாம் ஹென்றி , டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், டேவிட் வைஸ். இவர்கள் 1 கோடியை அடிப்படை ஏலத் தொகையாக கொண்ட வீரர்கள்.
இது போன்ற பல்வேறு விதமான செய்திகளை அறிய தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.