IPL: இந்தாண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டிகள் அடுத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் மினி ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். அதன்படி டிசம்பர் 23ம் தேதி மினி ஏலம் கொச்சியில் நட்ததப்படுகின்றது.
மினி ஏலத்தில் ஓவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்களையும் அணியிலிருந்து விடுவிக்கும் வீரர்களையும் நவம்பர் 15ந் தேதியன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்படி ஓரு மாஸ்டர் பிளானை போட்டுள்ளது சிஎஸ்கே அணி. இந்தாண்டு தோனி கேப்டனாக இருந்து வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆல்ரவுண்டர் ஜடேஜா கடந்த சிஸ்கே அணியில் கேப்டனாக இருந்தார் அப்போது சரிவர சென்னை அணி வெற்றி பெறவில்லை இதனால் பலரின் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இதையும் கவனியுங்கள்: பொல்லார்ட் ஐபிஎல்லில் ஓய்வு அறிவிப்பு மும்பை இந்தியன்ஸில் புதிய பதவி

இதனால் அவர் சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்து வந்தார். பின்னர் தோனியின் அறிவுரைப்படி திரும்பவும் அணியில் இணையவுள்ளார். IPL போட்டிகளில் இதுவரை சிஎஸ்கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த வருடம் பல தோல்விகளை தழுவி 9 இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்தாண்டு தன் அணியின் பலத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. அதன்படி மினி ஏலத்தில் விடுவிக்கும் வீரர்களை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) இவர்களை விடுவித்துள்ளது.
சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி
சிஎஸ்கே அணியில் பல மாற்றங்களை விரும்பும் அணி நிர்வாகம் 3 வீரர்களை பரிந்துரைக்க திட்டம் தீட்டியுள்ளது. டி20 உலக கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் சாம் கரனை திரும்பவும் அழைக்க திட்டம். இவர் ஆல்ரவுண்டராக இருந்து அணியின் முன்னேற்றத்திற்கு உதவுவார் என நிர்வாகம் கருதுகிறது.
அதுபோல சிஎஸ்கே அணிக்கு அனுபவம் மிக்க இந்திய பவுலர்கள் யாரும் இல்லை என்ற நினைப்பு உள்ளது. புவனேஷ்குமார் போன்ற நல்ல பவுலரை வாங்க திட்டமிட்டுள்ளது. மேலும், பங்களாதேஷின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் போன்ற வீரரையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்க திட்டம் தீட்டியுள்ளது
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.