2023-2027 ஐபிஎல் (IPL) ஓளிப்பரப்பு ஏலம் முடிவுக்கு வந்தது. 2023-2027 ஆம் ஆண்டுகளுக்கான தொலைகாட்சி ஓளிப்பரப்பிற்கான உரிமம் ஏலம் 12 மற்றும் 13 என இரண்டு நாட்கள் பிசிசிஐ யால் நடத்தப்பட்டது. 2 நிறுவனங்கள் தனிதனியே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் ஓளிப்பரப்புக்கான ஏலத்திற்கு 10 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்றது. டிஸ்னி ஸ்டார், சோனி நெட்ஓர்க், ஜீக்குழுமம், சூப்பர் ஸ்போட், டைம்ஸ் இன்டர்நெட், ரிலையன்ஸ் வியாகாம் 18 போன்ற முன்னனி நிறுவனங்கள் போட்டியிட்டன.

2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் கடந்த ஐபிஎல் 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இம்முறை 4 பிரிவாக ஏலம் கேட்கப்பட்டது.
தற்போது வரை 74 போட்டிகள் மட்டுமே வரும் ஆண்டுகளில் அது 94 போட்டிகளாக மாற்றப்படும் என்றும் பிசிசிஐ உறுதியாக தெரிவித்தது. அதனை தொடர்ந்து ஏலம் கிடுகிடுவென மதிப்பு கூடத் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனம்23,575 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 20,500 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி முடிவினை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.