பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

0
17

நம்மில் பலர் இன்னும் இந்த கேள்விக்கு பதில் தெரியாது இருக்கிரோம். உண்மையில் பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? இதற்கான பதிலை இங்கே பார்த்து தெரிந்து கொள்வோம்.

பூனை பழங்காலத்தில் காடுகளில் வாழும் காட்டு விலங்காக தான் இருந்திருக்கும். பிற்காலத்தில் வீடுகளிலும் வளர்க்கப்படும் விலங்கினமாக மாறி இருக்கின்றது. இன்றும் காட்டில் பூனைகள் இருப்பதை நம்மால் காணமுடியும். இவ்வாறு காட்டில் வாழும் பூனைகளை காட்டுப் பூனை என்று சொல்வோம்.

ஏனெனில், காட்டுப் பூனைகள் வேட்டையாடும் இயல்பினை உடையவை. பூனைகள் பொதுவாக எலிகளையே வேட்டையாடும் இயல்பு உடையது. நமக்கு தெரிந்த வரை பூனை இரவில் திருட்டுத் தனமாக வீட்டிற்குள் புகுந்து பாலை குடிக்கும் என்பது தான். இன்று நாம் வீட்டில் பூனையை வளர்க்கவும் ஆராம்பித்து விட்டோம்.

நாம் உண்ணும் உணவினையே அதுவும் உண்ணுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் அனைவருக்கும் பூனையைப்  பிடிக்கிறது. அழகான சிறிய முகமும், அழகான கண்களையும், மியாவ் மியாவ் என கத்தும் அழகும் அருமையாக இருக்கும், நம்மை அது அதன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும். பூனைகள் பாலினை தன் நாவினால் நக்கி நக்கி குடிக்கும் அழகும் மிக அழகாக இருக்கும்.

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனைகள் குறுக்கே சென்றால் அபசகுனமா என்பதை பார்ப்போம். பொதுவாக பூனைகள் அங்கும் இங்கும் பெரும்பாலும் திரிந்துக் கொண்டே தான் இருக்கும். பூனை நாம் செல்லும் வழியில் குறுக்கே வந்தால் அது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. பூனை நமது இடபுறத்து வழியை மறித்து வடபக்கமாக செல்வது தான் அபசகுனமாக கருதப்படுகின்றது. அப்படி நாம் செல்லும் வழியில் வந்தால் சறிது நேரம் அமர்ந்து தண்ணீர் அருந்தி விட்டு செல்வது தான் வழக்கமாக நாம் இன்றும் கடைப்பிடிக்கப்படும் சகுனமாக காணப்படுகிறது.

காட்டுப்பகுதி பயணமும் பூனையும்

பழங்காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கு பேருந்துகள், ரயில்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் எதுவும் இல்லை. அப்போது மக்கள் பயணம் மேற்கொள்ள பெரும்பாலும், மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டிகளையே நம்பியிருந்தனர்.

அப்போது காட்டுப்பகுதி பயணங்களை முடித்து விட்டு வீடுகள் நிறைந்த பகுதியான  பூனைகள் இருக்கும் பகுதி ஊர் பகுதி என்று வண்டிகளை இயக்குபவர்கள் அறிந்திருந்தனர். ஊர் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பொழுது, குழந்தைகள் வண்டிகளில் அகப்பட்டு விடக் கூடாது என்பதற்காக வண்டியின் வேகத்தைக் குறைத்து இளைப்பாறி செல்வார்களாம்.

மேலும், அக்காலத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இரவு நேரங்களிலும் பயணம் மேற்கொள்ளவார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது விளக்கு  வெளிச்சங்கள் பெரும்பாலும் இல்லாமல் இருட்டாக தான் இருக்கும். அப்போது தூரத்தில் வரும் பூனையின் உருவம் நம் கண்களுக்கு தெரியாது. பூனையின் கண்கள் மட்டும் தனியாக தெரியும்.

பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

ஆதாவது பூனையின் கண்ணை இருட்டில் பார்க்கும் போது ஓரு ரேடியம் எஃபெக்டில் நமக்கு தெரியும். இரண்டு கண்களும் அப்படியே மின்னும். எனவே மாடும் குதிரையும் பூனையின் கண்ணைகளைப் பார்த்து மிரளக் கூடும் என்பதற்காக பூனை குறுக்கே செல்லும் பொழுது வண்டியின் வேகத்தை குறைத்து மாட்டிற்கும் குதிரைக்கும் தண்ணீர் கொடுத்து அவர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்வது வழக்கமாக நம் முன்னோர்கள் பின்பற்றினர்.

மூட நம்பிக்கை

இதனை தான் பூனை குறுக்கே சென்றால் அபசகுனம் என தவறான மூட நம்பிக்கையாக வளர்ந்து விட்டது. இன்றும், பூனை குறுக்கே சென்றால் அபசகுனம். தண்ணீர் குடித்து விட்டு சிறிது ஓய்வு எடுத்து செல்ல வேண்டும் என்று பல இடங்களில் இம்மூட நம்பிக்கை நம்பப்பட்டு வருவதை நம்மால் காண முடிகிறது.

பூனைக்கு மட்டும் தான் அவ்வாறு கண்களில் ரேடியம் தெரியுமா என்றால் இல்லை. புலி, சிறுத்தை, சிங்கம், கருஞ்சிறுத்தை இது போன்ற காட்டு விலங்குகளுக்கும் இப்படி தான் ரேடியம் மின்னுவது போல தெரியும்.

பூனை சார்ந்த நம்பிக்கைகள்

  • பூனையின் ஆறாவது உணர்வு ஓரு நாயைப் போல இருக்கிறது என நம்பப்படுகிறது.
  • எதிர்கால நிகழ்வுகளை அது முன்னதாகவே அறிந்து கொள்கிறது எனவும் கருதப்பபடுகிறது.
  • பூனை வீட்டிற்கு வந்து அழ ஆரம்பித்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கக் கூடும் என நம்பினர்.
  • இதுவே சண்டையிட்டுக் கொண்டால் பணம் இழப்பு சார்ந்த சண்டைகளுக்கு முன்னெச்சரிக்கையாக அமையும் எனவும் நம்பினர்.
  • பூனை வீட்டிற்குள் குட்டிப் போட்டால் அது வீட்டிற்கு நல்லது என கருத்து காணப்படுகிறது.
  • பூனை ராகு பகவானின் வாகனமாக பார்க்கப்படுகிறது.
  • பூனையை வீட்டில் வளர்ப்பது நலல பரிகாரமாக கருதப்படுகிறது.
  • பூனை முடியை சிவப்பு துணியில் கட்டி வைத்திருந்தால் காலசர்ப தோஷம் நீங்கும்.
  • கண் திருஷ்டி, பில்லி சூன்யம் ஆகிய ஏவல்களிலிருந்தும் இது காக்கும்.
  • யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடித்தால் அது பணவரவை குறிக்கும்.
  • பூனை ஓரு இறைச்சியை கவ்விக் கொண்டு செல்வதை பார்த்தால் அது நாம் செல்லும் வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • நம்முடைய கால்களை நக்கினால் அது எதிர்காலத்தில் நோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் கருதப்பட்டது.
  • பூனை தலையை நக்கினால் அரசாங்க வழக்கில் சிக்கல்கள் நேரலாம்.
  • தந்திர மந்திர சாஸ்திரத்தில் பூனை ஓரு முக்கியமான உயிரினமாக கருதப்படுகிறது.

பூனையும் அயல்நாட்டினரின் நம்பிக்கையும்

எகிப்தியர்கள் பூனைகள் தீய சக்திகளிடமிருந்து நம்மை காக்கும் என நம்பினர். பூனைகளின் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். எகிப்தியர் பூனையை மியாவ் மியாவ் என்றே அழைப்பர்.

சில ஆசிய நாடுகளில் கருப்புப் பூனைகள் தீய சக்தியிடமிருந்து காப்பாற்றும் என்றும், சில ஐரோப்பிய நாடுகளில் கருப்புப் பூனைகள் தீய சக்திகளாகவும் நம்பப்படுகின்றன.

இத்தாலியில் பூனை தும்புவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

நம் நாட்டில் புதுமனைப் புகுவிழாவில் வீட்டிற்குள் பசு மாட்டினை புக விடுவார்கள். ரஷ்யாவில் பூனையைப் புக விடுவார்கள்.

ஜப்பானில் பூனைகள் வீட்டில் வளர்ப்பது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

இது போன்ற மேலும் பல உண்மை தன்மை கொண்ட சுவாரசிய தகவல்களை அறிய தலதமிழ் (thalatamil.com) வலைத்தளத்தை பின்பற்றுக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here