SSLV-D1 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு வந்துள்ளது

0
7

SSLV-D1 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு வந்துள்ளது. மேலும், செயற்கை கோள்கள் பயனிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்தது.

SSLV-D1 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு வந்துள்ளது

அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆசாதிசாட்  எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்ட 7ம் தேதி அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் என்ற கல்விசார் செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் எல்லா படிநிலைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது, ஆனால் சிக்னல் இழப்பு விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.

இன்று ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 செயற்கை கோள் செயல் இழந்து விட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் தோல்வி அடைந்து விட்டதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here