ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். அவர் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஹிட்டாகும் பல படங்களின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். ஜான்வி ‘குட்லக் ஜெர்ரி’ என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். இது தமிழல் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அதன் பிறகு ‘மிலி’ என்ற படத்தில் ஜான்வி நடித்தார். இது தமிழல் கீர்த்தி பாண்டியன் நடித்த ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரீமேக் ஆகும். இதன்படி தமிழில் வெளியாகும் படங்களை மிக உன்னிப்பாக கவனிக்கிறார் ஜான்வி. இது பற்றி அவர் கூறியதாவது.
‘அம்மா ஸ்ரீதேவி தமிழ் பெண் என்பதால் அவர் நடித்த தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். அதேபோல் இப்போது வெளியாகும் தமிழ் படங்களை மிகவும் ரசித்து பார்க்கிறேன். தமிழில் விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர் நடித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பது எனக்கே நினைவில்லை. அந்த படத்தை சமீபத்தில் கூட பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்து பாராட்டினேன். உங்களின் தீவிர ரசிகை நான். உங்களோடு சேர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதை கேட்டுவிட்டு ஐய்யய்யோ என்று அவர் ஆச்சரியம் அடைந்தார். அந்த அளவுக்கு எனக்கு விஜய் சேதுபதியை பிடிக்கும்’. இவ்வாறு ஜான்வி கூறினார்.