நகங்களை அலங்கரிக்கும் நகைகள்: பெண்களுக்கு மிகவும் அலாதியான ஓன்று என்றால் அது நகைகள் என்று சொல்லலாம். அவர்களை அழகை மேம்படுத்தும் அது அவர்களை மிகவும் சந்தோஷம் அடைய செய்யும் அவர்களை அவரே காதல் செய்யும் அவளவிற்கு அவர்களின் அழுகு சார்ந்த விஷயங்களில் ஓன்றாக நகைகள் பண்டைய காலம் தொட்டு இந்த நவீன காலம் வரை இருந்து வருகிறது.
இன்று நவீன காலத்தற்கு ஏற்ப நகைகள் பல விதங்களிலும் குறைந்த செலவிலும் வருகின்றது. அதிலும் இன்று பெண்களின் நகங்களை அலங்கரிக்கும் நகைகளை அவர்கள் மிகவும் நேசிக்கின்றனர். அந்த வகையில் காதணி, கழுத்தணி என்று ஆரம்பித்து தற்போது நகங்களில் கூட நகைகள் அணிவிக்கப்படுகிறது.

இவைகள் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் சாதாரண உலோகங்களில் கூட உருவாக்கப்படும் நகைகள் இன்று சந்தைக்கு வந்து பெண்களை கவர்ந்து வருகிறது. இவை பல நூறு ரூபாய்களில் தொடங்கி பல லட்சங்கள் வரை அவற்றின் விலை உள்ளது.
முழுமையாக நகத்தை மறைக்கும் கவசம் போலவும், விரலையும் நகத்தையும் இணைக்கும் சங்கிலி போல் நகங்களில் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் விதவிதமாக அவை கிடைக்கின்றன. இவைகள் பெண்களின் அழகை மேலும் அதிகப்படுத்தி அவர்களையும் சந்தோஷம் அடைய செய்கிறது.
பெண்கள் பொதுவாக கழுத்தணி, காதணி, கால் செயின், கைக்கு பிரேஸ்லட், மூக்குத்தி தற்போது வயிற்றுப் பகுதியில் தொப்புள் பகுதியில் சில ரிங்குகள் என நவீன காலத்திற்கு தகுந்தார் போல தன்னை அழுகுப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நகங்களை அலங்கரிக்கும் நகைகளும் டிரன்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.