ஜான்வி கபூர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த புதிய படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜுனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் இணைகிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர் இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று ஐதராபாத்தில் தொடங்கின. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் ராஜமவுலி க்ளாப் போர்டு அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ‘கேஜிஎஃப்’ பட இயக்குனர் பிரசாந்த் நீலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.