காஞ்சியில் வடகலை தென்கலையினர் மோதல்

0
10

காஞ்சியில் வரதராஜர் திருக்கோயிலில் வடகலையினருக்கும் தென்கலையினருக்கும் இடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடேயே மோதல் ஏற்பட்டது. பின் அது கைகலப்பாக மாறி சரமாரி தாக்கிக் கொண்டனர். இதனை கண்ட பக்தர்கள் முகம் சூழித்து கொண்டு சென்றனர்.

சித்திரை பௌர்ணமி தினத்தையொட்டி வரதராஜ பெருமாள் பாலாற்றங்கரையில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

காஞ்சியில் வடகலை தென்கலையினர் மோதல்
காஞ்சியில் வடகலை தென்கலையினர் மோதல் (பழைய படம்)

அப்போது பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி கைகலப்பாக மாற, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது வரதராஜ பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.

வடகலையினருக்கும் தென்கலையினருக்கும் கடந்த வருடம் இதுபோன்றே மோதல் நிகழ்ந்தது அதை இது நினைவுக் கூறவைக்கிறது. அடிக்கடி இவர்கள் மோதல் போக்கில் ஈடுபடுவது தொடர் கதையாகிறது.

வைணவர்கள் நாமம் அணிவதை வழக்கமாகவும் மேன்மையாகவும் கருதுபவர்கள் வைணவர்கள் சமய நெறிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனை வைணவர்கள் ‘திருமண் அணிதல்‘ என்று கூறுவர். இதில் வடகலையினருக்கும் தென்கலையினருக்கும் நாமம் அணிவதில் சிறு வேறுபாடிகள் உள்ளது. இதுவே இவ்விருவரையும் வேறுபடுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here