கார்த்தியின் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. மதுரையைச் சுற்றி எடுக்கப்பட்ட படமாகவும் நம் மண்ணின் கதை அம்சமும் குடும்ப உறவுகளின் அன்பையும் பற்றி பேசும் படமாகவும் இருக்கும் இப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வெளியானது.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி, கதாநாயகியாக அதிதி ஷங்கரும் நடித்துள்ளார். இவருக்கு இது முதல் படமாக அமைந்துள்ளது.
கொம்பன் புகழ் முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பாடல் மதுர வீரன் என்ற பாடலைப் பாடி, பாடகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக அரங்கேறியது. அதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் வேலை, செய்தியாளர்கள் சந்திப்பும் நடந்து முடிந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர். ட்ரைலரும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது.யுவனின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்.
இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் குடும்ப பிண்ணனியில் இயக்குநர் முத்தையா சிறப்பாக கதையை தருகிறார். படம் சிறப்பாக உள்ளது மேலும் இன்று உலகத்தில் தீய செயல்கள் வெகு அளவில் பெருகி விட்டது. மேலும் பெண் பிள்ளைகளை மையமாக வைத்து பல வன்முறைகள் நிகழ்கிறது. இது போன்ற திரைப்படங்களின் வாயிலாக பாரம்பரிய உறவு முறைகளையும் கொண்டாடும் விதமாக உள்ளது. மேலும் தவறுகள் நடைபெறாமல் அனைவரையும் குடும்பத்தில் ஓருவராக எண்ணும் நிலையை இது போன்ற படங்கள் நிகழ்த்துகிறது.