100 கோடி கிளப்பில் ‘சர்தார்’- வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
1

சர்தார்: கார்த்தி, லைலா, ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே உள்ளிட்ட  பலர் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘சர்தார்’. தண்ணீரை வைத்து நடக்கும் முறைகேடு மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்பை ஆக்ஷ்ன் த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது ‘சர்தார்’ திரைப்படம். கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்துடன் வெளியான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் சரிவர ஓடாத நிலையில், கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது.

karthi's sardar releases on OTT

இந்நிலையில் ஆஹா ஓடிடி தளத்தில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் சர்தார் படத்தை வெளியட இருப்பதாக ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தது. பி.எஸ்.மிதரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியான 12 நாட்ளிலேயே 85 கோடி ரூபாய் வசூலித்ததை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் லக்ஷ்மண் லான்சன் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது. இந்த காருக்கான சாவியை நடிகர் கார்த்தி இயக்குனருக்கு வழங்கியிருந்தார். இந்த போட்டோ இணையதளங்களில் வைரலானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here