ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கட்டா குஸ்தி திரைப்படம்

0
2

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கட்டா குஸ்தி திரைப்படம். இப்படத்தில் குஸ்தி வீரனாக களம் இறங்கியுள்ளார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து தனக்கே உரிய இடத்தை பிடித்து சராசரியான ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவராக திரையுலகில் இருந்து வருகிறார். தொடர்ந்து இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சன், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.

தற்போது, கிராமங்களில் நடக்கும் குஸ்தி வீரர்களின் கதைக் களத்தில் நடித்துள்ளார். இன்று பல கிராமங்களில் மணலில் நடைபெறும் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ள படம் கட்டா குஸ்தி.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கட்டா குஸ்தி திரைப்படம்

இப்படத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தன் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா லக்ஷமி விஷணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.  இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ செல்லா அய்யாவு இயக்குகிறார். விஷ்ணு விஷாலும், தெலுங்கு பிரபல நடிகர் ரவிதேஜாவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து உள்ளனர்.

இப்படம் கன்னட படமான கோதா படத்தின் ஓரே படத்தின் சாயல் என்று பேசப்பட்டாலும் இந்த கதை அம்சம் வேறு அந்த படத்தில் வரும் கதை அம்சம் வேறு என்பதை விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரவி தேஜா நடித்துள்ளார். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகிறது.

இதையும் படியுங்கள்: தமிழ் திரைத்துரையில் ஓருவர் கூட வாழ்த்தவில்லை-ஆர்.கே.சுரேஷ்

இது போன்ற சனிமா தகவல்களையும் வேறு தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here