கேரளா: திருவனந்தபுரத்தை சார்ந்த ஆட்டோ டிரைவர் அனுப் என்றவருக்கு லாட்டரி மூலம் 25 கோடி ரூபாய் ஓணம் பரிசாக கிடைத்துள்ளது.
லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு அரசு பல பிரச்சனைகள் காரணமாக தடை வித்துள்ள நிலையில் லாட்டரி சீட்டு விற்பனையை முறையாக கேரளா அரசு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓணத்தை முன்னிட்டு 25 கோடி முதல் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டினை அறிமுகம் செய்து விற்பனை ஆகி வந்தது.
இந்த லாட்டரி சீட்டின் கேரள நிதியமைச்சர் பாலகோபாலன் அவர்கள் இந்த ஆண்டு ஓணம் சிறப்பு குலுக்கலில் முதல் பரிசு பெற்ற வெற்றியாளரை தேர்வு செய்தார். இந்த நிலையில் முதல் பரிசு பெற்றவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனுப் என்பது தெரியவந்துள்ளது.
ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அனுப், ‘பரிசுத்தொகை ரூ.25 கோடியை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் இருப்பினும் என்னுடைய குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முறையில் முதலீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வருடம் ஓணம் சிறப்பு குலுக்கலில் ஜெயபாலன் என்ற ஆட்டோ ஓட்டுநர் தான் 12 கோடி பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அனுப்பிற்கு ஓரு அட்வைஸ் செய்துள்ளார். பணத்தை அப்படியே டெப்பாசிட் செய்து விடுங்கள் உதவி கேட்கும் உறவினருக்கு நண்பர்களுக்கு கொடுத்து விட வேண்டாம். அதனால் பல சிக்கல்கள் வரும் என்று தன் அனுபவத்தை கூறியுள்ளார்.
மேலும், உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். கடந்த வருடம் பரிசு வென்ற ஜெயபாலன் இன்றும் ஆட்டோ ஓட்டி சம்பாதிதான் குடும்பம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல செய்திகளை அறிய தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.