உலக கோப்பை நடத்தும் கத்தாருக்கும் திருப்பூருக்கும் உள்ள இணைப்பு

0
7

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA WORLD CUP 2022) கத்தாரில் வெகு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் திருப்பூர் நகருக்கும் கத்தார் நாட்டிற்கும் உள்ள தொடர்பை இப்பதிவில் பார்ப்போம்.

உலகமே எதிர்பார்த்த உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் பல நாட்டு வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பான திறமைகளை வெளி கொணர்ந்து வருகின்றனர். இதற்காக கத்தார் பலவித ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த ஆண்டு உலக கால்பந்து போட்டியை கத்தார் நாடு நடத்தும் என்பதை 2010 ஆம் ஆண்டே தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

உலகம் முழுவதும் விளையாட்டுகளில் ஓன்று கால்பந்து இந்த கால்பந்து போட்டிகளுக்கு உலகம் முழுவதிலும் பல லட்சம் கோடி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டியை கத்தார் அரசு பிரம்மாண்டமான முறையில் நவம் 20 தேதி தொடங்கி வைத்தது. இம்முறை நடக்கும் போட்டிகளில் எந்த நாட்டு அணி சாம்பியன்ஸ் பட்டம் வெல்லுவார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

உலக கோப்பை நடத்தும் கத்தாருக்கும் திருப்பூருக்கும் உள்ள இணைப்பு

இந்த உலக கால்பந்து போட்டிகளில் 200க்கும் அதிகமான பல்வேறு நாட்டு கால்பந்து அணி வீரர்கள் பங்கு கொள்கின்றனர். இந்த போட்டிகளுக்கான டிசர்ட் மற்றும் டிராக் ஷூட்களை தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் திருப்பூர் நகருக்கே உரிமை கிடைத்துள்ளது.

திருப்பூர் முதன்முதலில் தமிழகத்திற்கு மட்டுமே ஆடைகளை தயாரித்தது பின்னர், இநதியா முழுவதுமாக ஆடைகளை தயார்ப்படுத்தி ஏற்றுமதி செய்தது. தற்போது இந்திய நாட்டை தாண்டி கத்தார் உலக கோப்பை அணிகளுக்கு வழங்குவதற்காக ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்து ஏற்றுமதி வழங்கியுள்ளது பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது. இதுவரை கத்தார் அரசு 17,000 ஆர்டர்களை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிகிறது. ஆர்டர்கள் கொச்சி விமான நிலையம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: அர்ஜென்டீனாவை வீழ்த்தியதன் எதிரொலி இன்று சவூதிக்கு பொது விடுமுறை

இது போன்ற பலவித தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.த

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here