கள்ளழகர் ஆடித்திருவிழாவின் தேரோட்டம் இன்று பக்கதர்களின் அலைகடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மதுரை: அழகர் மலை உலகப் பிரசித்தம் பெற்ற தலமாக விளங்குகிறது. கள்ளழகரின் ஆடித்திருவிழாவின் ஓரு பகுதியாக இருக்கும் தோரோட்ட நிகழ்வு இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
கள்ளழகரின் ஆடித்திருவிழா கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்தாண்டு தொற்றின் தாக்கம் குறைந்து உள்ளதால் பக்தர்களின் கோரிக்கையால் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 4ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டம் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து 6.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற்றது. ஏராலமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரினை இழுத்தனர்.
நாளை 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.