மம்தா மோகன்தாஸ்: தமிழில் ‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு போராடி அந்த நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார். இவர் தற்போது சில படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நயன்தாராவால் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.
இதுபற்றி மம்தா மோகன்தாஸ் கூறியதாவது, ‘ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘குசேலன்’ படத்தில் நானும் நடித்திருந்தேன். அதில் இடம்பெற்ற பாடல் காட்சியில் பங்கேற்றேன். 4 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ஏதோ தவறாக நடக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இந்த பாடலில் நான் இருக்க மாட்டேன் என்றும் நினைத்தேன். பிறகு நான் நினைத்தபடியே அந்தப் பாடலின் ஒரு ஷாட்டில் கூட நான் இல்லை. அதற்கு அதில் இடம்பெற்ற நடிகைதான் (நயன்தாரா) காரணம் என்பதைப் பிறகு அறிந்தேன். அந்த நடிகை ஷெட்டில் இருந்தால் நான் வரமாட்டேன் என்று அவர் இயக்குனரிடம் எச்சரித்ததும் தெரிய வந்தது. நயன்தாரா ஏன் இப்படி ஆணவத்துடன் நடந்து கொண்டார் என எனக்கு தெரியவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.