மருதுபாண்டியர் 221 வது கருபூஜையை முன்னிட்டு நாளை 7 தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமறை என சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு சிவகங்கை, தேவக்கோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருபுவனம், திருப்பத்தூர் ஆகிய ஏழு தாலுக்காவில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
‘ நாட்டின் சுதந்திரத்திற்காக பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து முதல் போர் பிரகடனம் செய்து, பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டு தூக்கு கயிறை சந்தித்தவர்கள் மருதுபாண்டியர்கள். அவர்களைநினைவு கூறும் விதமாகஅரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டது.

அக்.24ல் அவர்களது 221வது குருபூஜை நடைபெறுகிறது, அரசு சார்பில் திருப்புத்தூரில் மருதிருவர் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்த 6 அமைச்சர்கள் பங்கேற்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர்கள் பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர்.
தன்னலம் சாராது நாட்டின் சுகந்திரத்திற்கு பாடுப்பட்ட இவர்களை போற்றி குருபூஜை செய்து வழிபடுவதை தமிழ் நாடு அரசு பெருமையாக நினைக்கின்றது. இதன் காரணமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் 7 தாலுக்கா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 27.10.22 பொது விடுமுறையாக அறிவித்துள்ளார்.