இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவிப்பு

0
9

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவிப்பு. 27 ஆண்டுகளாக இயங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை ஜூன் 15 முதல்  நிறுத்துவதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மக்களுக்கு, இணையத்துடனான முதல் முயற்சியானது இன்டர்நெட் எஸ்ப்ளோரர் மூலம் தொடங்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் உள்ளதால் எஸ்ப்ளோரர் பிரவுசரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவிப்பு
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவிப்பு

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறி்விப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Outlook, OneDrive and Office 365 போன்ற பியூச்சர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படாது என ஏற்கனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மைக்ரோசாப்ட் வெப்-ன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

1990 களில் பயணர்களுக்கு பக்கத்துணையாக இருந்தது கால மாற்றத்திற்கேற்ப பல அப்டேட்களை பயணர்களுக்கு வழங்காதது பெரும் இழப்பாக கருதப்படுகிறது. தரவுகளை விரைவுப்படுத்துதல் முதல் அனைத்தையும் சிறப்பாக செய்யாததும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் வெப் இன்டர்நெட்டாக வலம் வந்தது 2003 ஆண்டு 95 சதவீகிதம் பயணர்கள் இதனை பயன்படுத்தினர். பின் பல நிறுவனங்கள் அதற்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட நிலையில் இதனால் போட்டியிட முடியாததால் இன்று இதை நிறுத்துவதாக மைக்ரோ சாப்ட்வேர் எட்ஜ் நிரல் மேலாளர் சீன் லிண்டர்சே தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here