புதுமைப்பெண் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு வருகைத்தர டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவாலுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் அழைப்பு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகையாக அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி முதலமைச்சரை அன்பில் மகேஷ் நேரில் சென்று அழைப்பு மடலை கொடுத்து அழைத்தார்.
சென்னை பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 15 மாதிரி பள்ளிகள், 28 சீர்மிகு பள்ளிகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் படிப்பு செலவுக்காக இந்த தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பல பொற்றோர்கள் மாணவிகளை கல்லூரிக்கு சென்று படிப்பை தொடர தயங்கும் நிலை வறுமை காரணமாகவும் பயத்தின் காரணமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். எதிலும் பெண்கள் தனித்து பயம் இன்றியும் நல்ல அறிவுடனும் வறுமை நம்மை அமர வைக்கும் என்ற எண்ணத்தை மாற்றியும் ஓரு நல்ல பாதைக்கு செல்ல இந்த திட்டம் வழிவகை செய்யும் என்பதில் ஐயமில்லை.
பாரதி கண்ட புதுமைப் பெண் இவ்வுலகில் வர வேண்டும் எதிலும் பெண் ஆணுக்கு சமமாக பெண்கள் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் தமிழகத்தில் தொடங்கப்படுவதாக உள்ளது. ஆகவே இத்திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.