உலகப் பரசித்தம் பெற்ற வைணவ திருக்கோவில்களில் முதலாவதாக காணப்படும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் திருக்கோவிலில் நீண்ட நாளது கோரிக்கைகளில் ஓன்றான முதலுதவி மையம் நேற்று தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திறந்து வைத்தார்.
திருவரங்கம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைப் புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மருத்துவச் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று, கோயிலில் அவசர தேவைக்கான முதலுதவி மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முதலுதவி மையத்தினை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் செல்வராஜ், மண்டல குழுத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் தேவைகளையும் அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதலவர் ஸ்டாலின், இந்து அறநிலையத்துறைய அமைச்சர், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியை கூறுவதாக பக்தர்களில் ஓருவர் கூறியிருந்தார்.