மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த மிதாலி ராஜ் தன் ஓய்வை அறிவித்தார்

0
15

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த மிதாலி ராஜ் தன் ஓய்வை அறிவித்தார். ஆடவர்கள் மட்டுமே பங்கு பெற்று வந்த கிரிக்கெட்டி விளையாட்டை வெகுவாக ரசித்து வந்த இந்திய மக்களை பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டை ரசிக்க வைத்த மிதாலி ராஜ் என்றால் அது மிகையாகாது.

மித்தாலி ராஜ் ராஜஸ்தானில் பிறந்தாலும், அவர் ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். மித்தாலி ராஜின் தந்தை துரை ராஜ், தாய் லீலா ராஜ். தந்தை விமானப் படை அதிகாரி என்பதால், பிற மாநிலங்களிலேயே தங்கி படித்து வளர்ந்தவர். தற்போது அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த மிதாலி ராஜ் தன் ஓய்வை அறிவித்தார்
மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த மிதாலி ராஜ் இன்று தன் ஓய்வை அறிவித்தார்.

இந்திய அணிக்காக அவர் செய்த சாதனைகள் பல 1999ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய மித்தாலி ராஜ், 16 வயதில் அயர்லாந்துக்கு எதிராக சதம் விளாசினார்.

இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 7 சதம், 64 அரை சதம் ஆகியவற்றுடன் 7,805 ரன்கள் எடுத்துள்ளார், 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 699 ரன்களும் 89 டி20 போட்டிகளில் விளையாடி2, 364 ரன்களும் மொத்தம் 10,868 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு உலக கோப்பை விளையாட்டில் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழி நடத்தியவர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு முறை சதம் அடித்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார் மிதாலி ராஜ். அவரை போற்றும் விதமாக அவருக்கு அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ விருது, ராஜ்வ் காந்தி கேல் ரத்னா விருது என பல விருதுகளை இந்திய அரசு வழங்கி சிறப்பித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here