கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோ பிக் ட்ரைலர் வெளியாகியது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியா வீரராக தன் அசாத்திய திறமையால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளை சாத்தியப்படுத்திய மிதாலி ராஜ் இம்மாதம் 8 ம் தேதி தனது அனைத்து வித கிரிக்கெட் விளையாட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. அந்தவகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை வைத்து பாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘சபாஷ் மித்து’ என்ற தலைப்பில் உருவாகிவரும்.
இப்படத்தில் மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்சி பன்னு நடிக்கிறர். ‘வியாகாம்18 ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்க அமித் திரிவேதி இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ஒரு போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் ‘சபாஷ் மித்து’ படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர், மித்தாலி ராஜா வாழ்க்கையோடு சேர்த்து கிரிக்கெட் விளையாட்டில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளையும் பேசுவது போல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக 12 டெஸ்ட், 232 ஓருநாள், 89 T20 போட்டிகளிலும், இறுதியாக 50 ஓவர் உலகக்கோப்பை ஓருநாள் கிரிக்கெட்டிலும் பங்கேற்றார். 2019 டிசம்பர் 3 அன்று பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்று படம் பற்றிய தகவல் வெளியாகியது.