உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்

0
9

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் குரங்கு அம்மை (MONKEY POKS) என்னும் தொற்று நோய். கோவிட் 19 எனப்படும் கொரொனா நோயால் உலகமே துன்பத்தை அனுபவித்தது தற்போது தான் பரவல் குறைந்து உலக நாடுகள் அனைத்தும் படிபடியாக மூச்சு விட தொடங்கியுள்ள இந்நிலையில் குரங்கு அம்மை நோய் என்னும் தொற்று நோய் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு காணப்பட்டு உள்ளது.

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்
உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்

குரங்கு அம்மை பெயர் காரணம் 

1958 ஆம் ஆண்டில் ஆய்வகத்தில் அடைக்கப்பட்ட குரங்கின் கால்களில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் இதனை குரங்கம்மை என்ற பெயர் வந்தது. 1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் பெரியம்மை நோயை அகற்றுவதற்கான தீவிர முயற்சியின் போது மனிதனுக்கு முதல் குரங்கு காய்ச்சலானது பதிவு செய்யப்பட்டது.

நோயின் அறிகுறிகள்

  • தலைவலி
  • காய்ச்சல்
  • தசை வலி
  • முதுகு வலி
  • வீங்கிய நணநீர் கணுக்கள்
  • உடல் அசதி

காய்ச்சல் தோன்றிய 1 முதல் 3 நாட்களுக்குள் (சில நேரங்களில் நீண்ட நேரம்), நோயாளிக்கு சொறி உருவாகிறது, அடிக்கடி முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

உலகம் முழுக்க குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் யாருக்கும் பதிவாகவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. குரங்கம்மையானது குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டால் அதனை கட்டுப்படுத்த அரசு அனைத்து தரப்பிலும் தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் இந்நோயினை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. இந்நோய் யாருக்காவது இருப்பது கண்டறியப்பட்டால் நோய் உள்ளவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும். குரங்கம்மை நோய் ஏற்பட்டவருடன் நெருங்கி பழகினால் தான் இந்நோய் பரவும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே ஐ.சி.எம்.ஆர். என்.ஐ.வி. தரப்பில் வெளயிடப்பட்டு இருக்கிறது.

குரங்கு அம்மை நோய் சமூக பரவலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மக்கள் கவலை கொள்ளும் அளவிற்கு இந்நோய் வேகமாக பரவும் நோய் இல்லை. ஆனால் மெதுவாக இது சமூக பரவலாக வாய்ப்பு இருப்பதாக உலக தொற்று அபாய நிலை இயக்குனர் சில்வி பிரையின்ட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here