தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் இன்னும் அதற்கான தொடக்க நிலையை கூட முடிக்காத நிலையில் இப்படத்தின் ஸ்டிரிமிங் ரைட்சை பிரபல நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் 160 கோடிக்கு வாங்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் மடிமணியாக முன்னணி நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் விஜய் இவரது படத்திற்கு எப்போதும் ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் பல மடங்கில் இருக்கும். அந்த வகையில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நடித்து வெளியான பீஸ்ட் படம் தகுந்த வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனைத்தை முன்னிலைப்படுத்தியது.
தற்போது, தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு என்ற படத்தில் நடித்து வந்தார் இப்படத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா முதன் முறையாக விஜக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், சரத்குமார், யோகிபாபு போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் முடிந்த பிறகு மாஸ்டர் படத்தின் மூலம் விஜயுடன் இணைந்த லோகேஷ்கனகராஜ் தற்போது அடுத்த படத்தில் இணையவுள்ளார். இப்படத்திற்கு தற்போதைக்கு தளபதி 67 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாகவே இப்படத்திற்கான ஸ்டிரிம்மிங் ரைட்ஸை வாங்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.
இதையும் படியுங்கள்: நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய அப்டேட் விக்னேஷ்சிவன்
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி மேலும், முன்னணி நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் தான் காரணமாக பார்க்கப்படுகின்றது. லோகேஷ் தனக்கே உரிய பாணியில் கதாநாயகி இல்லாமல் முழுக்க முழுக்க ஓரு கேங்ஸ்டார் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பாடல் காட்சிகளும் இடம் பெறாது. அது போல இப்படத்திற்கு சூட்டிங்கிற்கு குறைந்தது 170 நாட்கள் தேவைப்படுவதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர் சஞ்சைதத்து போன்ற வி்லலன்களை மாஸாக இறக்க திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத் பற்றிய செய்திகளால் விஜய் ரசிகர்கள் மிகுந்த குஷியடைந்து வருகின்றனர். தரமான திரைப்படத்தை வழங்குவார் இயக்குனர் லோகேஷ் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.