நயன் – விக்கி திருமணம் குறித்த ப்ரோமோ ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டடது. இருவருக்கும் திருமணம் முடிந்து 100 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் திருமண நிகழ்வுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவரது ஆரம்ப வாழ்வில் பல இன்னல்களை கடந்து வந்துள்ளார். இருப்பினும் தன்னை நடிப்பில் மெருகேற்றிக் கொண்டு சிறப்பாக இன்றளவும் சிறந்த நடிகராக வலம் வருகின்றார். பல தனிநபர் விமர்சனங்களுக்கும் ஆளாகினார். எதற்கும் அஞ்சாத பெண்மணியாகவும் தன் உழைப்பால் முன்னேறியவராக உள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த இருவருக்கும் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஓரு ரிசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் முடிந்தது.

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: செல்வராகவன் நடிப்பில் வெளியாகும் பகாசூரன் பாடல் இன்று வெளியாகியது
இத்திருமணத்துக்கான சாப்பாடு, ஹோட்டல் அறைகள், டெக்கரேஷன், மேக்-அப், பாதுகாப்பு உள்ளிட்ட செலவுகளை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்தான் பார்த்துக்கொண்டதாகவும் அந்த வகையில் சுமார் 25 கோடி ரூபாய் வரை அந்நிறுவனம் செலவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Beyond the flashlights and fame, there lives a dream named Nayanthara 🥰#Tudum presents the story of her rise to superstardom – Nayanthara : Beyond the Fairy Tale, coming soon! pic.twitter.com/FMMAh8AQcc
— Netflix India (@NetflixIndia) September 24, 2022
இந்நிலையில் நயன் – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ப்ரோமோ ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அதில் திருமணத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பேசும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
நயன் குறித்து பேசும் விக்னேஷ் சிவன், “அவர் சிறந்த நடிகை என்பதையெல்லாம் தாண்டி மிகச்சிறந்த மனிதர்” என்றார். அதேபோல் நயன்தாரா பேசுகையில், “நான் சினிமா குழந்தை கிடையாது. நான் ஒரு சாதாரண பெண். எதை செய்தாலும் அதில் எனது 100 சதவீதத்தை கொடுப்பேன்” என பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.