பத்துப்பாட்டு நூல்கள் : சங்க இலக்கிய நூல்கள் என்பவை எட்டுத்தொகை பத்துபாட்டு நூல்களைக் குறிக்கும். இந்நூலைகளை பதினென் மேற்கணக்கு நூல்கள் என்பர். சங்க இலக்கியத்துள் 2381 பாடல்களும் உடையது. 473 புலவர் பெருமக்களால் இயற்றப்பட்டது. பண்டைய தமிழரின் அன்பு, காதல், வீரம், கொடைச் சிறப்பு, போர், நம்பிக்கை, பாரம்பரியம், நாகரீகம் என அனைத்தையும் எடுத்தியம்பும் வரலாற்றுப் பெட்டமாக உள்ளது.
இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

பத்துப்பாட்டை குறிக்கும் பழைய வெண்பா :
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்ற பழைய வெண்பா பத்துபாட்டு நூல்களை குறிப்பிடுகிறது. இவற்றை ஆற்றுப்படை நூல்கள், அகம் சார்ந்த நூல்கள், புறம் சார்ந்த நூல்கள், அகபுறம் சார்ந்த நூல்கள் எனப் பிரிப்பர்.
தெரிந்துகொள்க: தமிழ் விடுகதைகள்
ஆற்றுப்படை நூல்கள் :
- திருமுருகாற்றுப்படை
- பொருணராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- மலைபடுகடாம்
அகம் சார்ந்த நூல்கள் :
- முல்லைப்பாட்டு
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
புறம் சார்ந்த நூல்கள் :
- திருமுறுகாற்றுப்படை
- பொருணராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- மலைப்படுகடாம்
- மதுரைக்காஞ்சி
அகமும் புறம் சார்ந்த நூல் :
- நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள் என்றால் என்ன?
ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். பரிசில் பெற்ற புலவன் ஓருவன் பரிசில் பெற செல்லும் புலவனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது. அதாவது நாடு ஆளும் வேந்தன் ஓருவன் கவிப் பாடும் புலவர்களுக்கு நல் பரிசும், நல் உணவு, தேவைகேற்ப செல்வம் என அனைத்தையும் அள்ளி தருகிறான் என்று பரிசு பெற்ற புலவன் பரிசில் பெற இருக்கும் புலவனை பார்த்து பாடுவதாக அமைந்தது ஆற்றுப்படை நூல்கள்.
பத்துப்பாட்டு அட்டவணை:
நூல்கள் | பாடிய புலவர் | பாட்டுடைத் தலைவன் | பாடல் அடிகள் |
---|---|---|---|
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | முருகன் | 317 |
பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார் | சோழன் கரிகாலன் | 248 |
சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்ததனார் | நல்லியகோடன் | 269 |
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | தொண்டைமான் இளந்திரையன் | 500 |
மலைப்படுகடாம் | பெருங்கெளசிகனார் | நன்னன் சேய் நன்னன் | 583 |
குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | ஆரிய அரசன் பிரகதத்தன் | 261 |
முல்லைப்பாட்டு | நப்பூதனார் | பாண்டியன் நெடுஞ்செழியன் | 103 |
பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | சோழன் கரிகாலன் | 301 |
நெடுநல்வாடை | நக்கீரர் | பாண்டியன் நெடுஞ்செழியன் | 188 |
மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | பாண்டின் நெடுஞ்செழியன் | 782 |
இதுபோன்ற தமிழ் இலக்கியங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆன்மீகம், ஜோதிடம், பழமொழிகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.