பிரண்டையில் மருத்துவ குணம் நிறைய இருக்கிறது. பிரண்டையில் விதவிதமாக பல ஐயிட்டங்கள் செய்து சாப்பிடலாம் இப்பதிவில் பிரண்டையின் நன்மைகள் மற்றும் பிரண்டை தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளிலும் கீரைகளிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அந்த வகையில் உடலுக்கு பலவித நன்மைகளை அள்ளி தருகிறது பிரண்டை இந்த அறிய வகை தாவர கொடியான பிரண்டை கிராமப்புறங்களிலும் மலைப்பகுதிகளிலும் கொடியாக படர்ந்து வளர்ந்து வருகிறது. உடலை வஜ்ரம் போல் காப்பதால் இதனை வஜ்ரவள்ளி என்ற பெயரும் இதற்கு உண்டு.
சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளில் பிரண்டை சேர்க்கப்படுவதுடன், கிராமங்களில் கை வைத்தியங்களுக்கும் பயன்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் மருந்துகள் தயாரிப்பதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. “பெத்த வயிற்றில் பிரண்டையை வைத்து கட்டு” என்ற பழமொழியும் கிராமப்புற மக்கள் பயன்படுத்துவதை நாம் பார்த்து இருக்கிறோம்.

பிரண்டையின் நன்மைகள்:
- அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பைக் கரைக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.
- பிரண்டையில் உள்ள சத்துக்களுக்கு அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.
- பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.
- உடல் பருமன் குறைவதோடு கெட்ட கொழுப்பை அகற்றும்.
- வாய்வு கோளாறால் சிறமப்படுவோருக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- மூல நோய்க்கு அருமருந்தாக பிரண்டை அமைந்துள்ளது.
- இரைப்பை அலர்ஜி, அஜீரணம், பசியின்மை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட உடல் பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
பிரண்டையில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கிறது. அதனால் எதிர்ப்பு சக்தியாக உள்ளது. காயங்களை ஆற்றும் சக்தியும் பிரண்டைக்கு உள்ளது.
கவனிக்க: உருளைக்கிழங்கு சாறு நன்மைகள்: உருளைக்கிழங்கு சாறு நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது
பிரண்டை தோசை செய்முறை:
இட்லி அரிசியை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊர வைக்க வேண்டும். பிரண்டையை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும் அதனுடன் பிரண்டையையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். தோசைக்கு பிரண்டை முத்தலாக இருந்தாலும் தவறில்லை.
இட்லி மாவும் பிரண்டையும் அரைத்த மாவினை 6 முதல் 8 மணி நேரம் வரை மூடி வைக்கவும் மாவு நன்றாக புளிப்பேறிய பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து பிரண்டை மாவினை எடுத்து தோசை ஊற்றுவது போல ஊற்றினால் பிரண்டை தோசை ரெடி முறுமுறுப்பான தோசையை பெற நன்றாக மெல்லியதாக ஊற்ற வேண்டும். இது அனைவருக்கும் பிடிக்கும் மேலும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்.
பிரண்டை தோசைக்கு சைடிஷ் தேவை ஏற்படாது நன்றாக முறுவலாக இருப்பதால் வெறும் தோசையே நன்றாக இருக்கும். சைடிஷ் விரும்புபவர்கள் வெங்காய சட்டினி செய்து தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் காரச்சாரமாகவும் அருமையான சுவையில் இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு மற்றவருக்கும் சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி ஓரு கப்
- பிரண்டை ஓரு கப்
- உப்பு தேவையான அளவு
மேலும், பிரண்டையில் ஏகப்பட்ட மருத்துவ குணம் உள்ளதால் பிரண்டையில் விதவிதமான ரெசிப்பிகளை செய்து சாப்பிடலாம். பிரண்டை பொடி செய்து சாப்பிடலாம், பிரண்டை ஊறுகாய் செய்யலாம், பிரண்டை துவையல், பிரண்டை ரசம் என அனைத்தையும் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமான உடலை பேணலாம்.