பிசாசு 2 படம் ஆகஸ்ட் 31 ம் தேதி வெளியாகிறது என படக்குழு தகவல்

0
3

பிசாசு 2 மிஷ்கின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆகஸ்ட் 31 ம் தேதி திரையரகுகளில் வெளி வர உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

2014  ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. அதை தொடர்ந்து பிசாசு 2ஆம் பாகத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இதில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

எப்போதும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஆண்ட்ரியாவுக்கு பிசாசு 2 பெஸ்ட் படமாக இருக்கும் என மிஷ்கின் தனியார் சேனல் நேர்காணலில் கூறியுள்ளார்.

சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக வெளியாகி வருகிறது ஒரே மாதிரி படங்களை செய்யாமல் தனக்கென ஒரு ஸ்டைலை அமைத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வரும் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி கண்டு வருகிறது.

பிசாசு 2 படம் ஆகஸ்ட் 31 ம் தேதி வெளியாகிறது என படக்குழு தகவல்

இப்படத்தில் விஜய் சேதுபதி ,சந்தோஷ் பிரதாப், அஜ்மல், பூர்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தன. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் மிஷ்கின்.

இந்நிலையில், PISASU 2 பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here