இசை மேதை இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர்

0
2

இசை மேதை இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டத்தை இந்திய பிரதமர் மோடி வழங்குகிறார். மேலும், உமையாள்புரம் மிருந்தங்க வித்வான் சிவராமனுக்கும் இந்த கௌரவ டாக்டர் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் தலைச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஓருவர் இளையராஜா. இவர் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அறிமுகமாகி இன்று வரை பல சிறந்த இசைகளை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரின் குரல் வளமும் இவரின் இசையும் மனதை கொள்ளை கொல்லும்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து பெயர் பெற்றிருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷ்ன மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்றிருக்கின்றார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளவர்.

இதையும் படியுங்கள்: கோவில் சுற்றுலா தலங்கள் அல்ல-உயர்நீதிமன்ற மதுரை கிளை

இசை மேதை இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர்

மேலும், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மிருந்தங்க வித்வானான உமையாள்புரம் சிவராமன் ஆகிய இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர். இவர் தனது 10 வயது முதலே மிருதங்கம் மீது உள்ள ஆற்றலால் சிறந்து விளங்கியவர். இதில் பல ஆய்வு பணிகளையும் செய்து காட்டியவர். இவர் முதன் முதலாக பயன்படுத்தியது இழை கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தால் வாசித்து பெயர் பெற்றவர்.

இந்த நிகழ்ச்சிக்காகவும் நாளை நடைபெறவுள்ள திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழாவினையும் முன்னணிட்டு வருகை தருகின்றார் பாரத பிரதமர். இதற்குமுன் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு ஜவர்கலால்நேரு, இந்திராகாந்தி, முராஜிதேசாய், ராஜிவ்காந்தி போன்றோர் வருகை புரிந்து சிறப்பித்துள்ளனர். 5வது நபராக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை சின்னாளப்பட்டிக்கு தனி ஹெலிக்காப்டர் மூலம் வருகை புரிகிறார்.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொள்கின்றனர். பிரதமரை வரவேற்க மதுரை விமான நிலையத்திற்கு ஆளுநரும் முதல்வரும் செல்கின்றனர்.

மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழாவில் கலைத் துறையில் சிறந்து விளங்கும் இந்த இருவருக்கும் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார் பிரதமர். இதற்காக மதுரை முழுவதும் போலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here