வெளியான 3 நாட்களிலேயே வசூலை வாரிக் குவித்த ‘லவ் டுடே’ திரைப்படம்

0
4

லவ் டுடே: ஜெயம் ரவி நடித்து வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீ்ப் ரங்கநாதன். அவர் இயக்கிய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதைத்தொடர்ந்து அவர் தான் இயக்கிய ‘App(A) Lock’ என்ற குறும்படத்தை ‘லவ் டுடே’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி இப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திர் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’, சுந்தர்.சியின் ‘காஃபி வித் காதல்’ ஆகிய படங்களுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் 3 நாட்களிலேயே உலகளவில் 27 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

pradeep ranganathan's love today movie

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 3 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் வரும் இந்த காலத்து காதல் மற்றும் நகைச்சுவை போன்றவை 2கே கிட்ஸ்க்கு பிடிக்கும் விதத்தில் இருப்பதால் திரையரங்குகளில் நல்ல வரவேற்பும், விமர்சகர்களிடையே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸையும்  இப்படம் பெற்று வருகிறது. இதனால் மற்ற 2 படங்களை விடவும் இப்படத்திற்கான திரையரங்கு காட்சிகள் அரங்கம் நிறைந்தே காணப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here